தூத்துக்குடி மாவட்டத்தில் பாரத பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தில் பயிற்சி பெற்று அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பேரிடர் காலத்தில் மருத்துவத்துறையில் பணிபுரிய ஆர்வம் உள்ளவர்களுக்கு பாரத பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அவசரகால மருத்துவ டெக்னீசியன், உதவியாளர், அவசர சிகிச்சை உதவியாளர், மருத்துவ உபகரணங்கள் தொழில்நுட்ப உதவியாளர், பிலபோடோமிஸ்ட் குறித்த ஒரு மாத காலம் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி பெற்றவர்களின் திறன்களின் அடிப்படையில் சுகாதாரத் துறையின் கீழ் வரும் ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளில்பணிபுரிய அழைக்கப்படுகிறார்கள்.
எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் மருத்துவப் பணிகளை செய்ய விருப்பம் உள்ளவர்கள் மேலும் விவரங்களை அறியும் பொருட்டு உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம், தூத்துக்குடி -6280101, தொலைபேசி எண் 94425 48732, 87783 33588 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்துக் கொண்டு பயிற்சியில் சேர பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

