திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி கரூர் மாவட்ட தி.மு.க சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் வேலை இழந்து, வருமானமின்றி தவித்து வந்த ஏழை குடும்பங்களுக்கு கடந்த 17ம் தேதி தொடங்கி கரூர் மாவட்டத்தில் தொலைபேசியில் அழைத்தவர்கள், நேரில் வேண்டுகோள் வைத்தவர்களுக்கு முப்பதாவது நாளாக 16ம் தேதி 2680 குடும்பங்களுக்கும், முப்பத்தி ஒன்றாம் நாளாக இன்று (17ம் தேதி ) 3845 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை பொதுமக்களுக்கு கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி வழங்கினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையால் வேலை இழந்து, வருமானமின்றி தவித்து வந்த ஏழை குடும்பங்களுக்கு கரூர் மாவட்ட தி.மு.க சார்பில் 17ம் தேதி(நேற்று) வரை 191680 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் மருத்துவ சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு இரத்தம் கொடையாக கடந்த 4ம் தேதி தொடங்கி கரூர் மாவட்ட தி.மு.க சார்பில் 17ம் தேதி வரை 1054 பேர் இரத்தம் வழங்கியுள்ளனர். அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மேலும் கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், விழுப்புரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் சிகிச்சை பெற்றுவரும் 755 நபர்களுக்கு இரத்தம் கொடையாக வழங்கி உயிர் காக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட கழக துணைச் செயலாளர் பூவை.ரமேஷ்பாபு, கரூர் மத்திய நகர கழக செயலாளர் எஸ்.பி.கனகராஜ், கரூர் வடக்கு நகர கழக செயலாளர் கரூர் கணேசன், கரூர் தெற்கு நகர கழக செயலாளர் சுப்பிரமணியன், அரவக்குறிச்சி ஒன்றிய கழக செயலாளர் மணியன், கரூர் ஒன்றிய கழக செயலாளர் கந்தசாமி, தாரணி பி.சரவணன் உட்பட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
செய்தி தொகுப்பு: கரூரில் இருந்து எம்.ஏ.ஸ்காட் தங்கவேல்

