எப்போதும்வென்றான் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகே சிவஞானபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக எப்போதும் வென்றான் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சர்க்கரை மகன் அறிவழகன் (42) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தை விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.


