கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேற்று மாசார்பட்டி சோதனைச்சாவடி, சென்னமரப்பட்டி சோதனைச்சாவடி மற்றும் வேம்பார் சோதனைச் சாவடிகளுக்கு நேரில் சென்று போலீசாரின் வாகன தணிக்கையை ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்
இந்த ஆய்வின் போது வாகனங்களில் வருபவர்களிடம், அவர்கள் என்ன காரணத்திற்காக எங்கு செல்கின்றனர் என்ற விபரங்களை கேட்டறிந்து, தேவையில்லாமல் வெளியே செல்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந் நிகழ்வின் போது தூத்துக்குடி மாவட்ட தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், மாசார்பட்டி காவல் ஆய்வாளர் அனிதா, விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.


