தமிழக முதல்வருக்கு மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம்.. தலைவர்.டாக்டர்.பொ.ப. பாலசுப்ரமணியன்.வேண்டுகோள்
தமிழகத்தில் கொரானா கொள்ளை வைரஸினால் அதிகம் அதிகமாக நோய் தொற்று பரவி வருகிறது சென்னையில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு சில மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது சில மாவட்டங்களில் அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு மூலம் இந்த நாள் வரை மக்கள் மிகவும் பாபாதிக்கப்பட்ட நிலையில் வாழ்க்கையில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் மதுபானக்கடைகள் அடைக்கப்பட்ட தின் காரணமாக எண்ணற்ற குடும்பங்களில் ஒரு சந்தோஷமும் சமாதானமும் ஒற்றுமையும் உண்டாகியிருந்தது. மீண்டும் மதுபான கடைகளைத் திறந்த போது எண்ணற்ற குடும்பங்களில் சண்டைகளும் பிரச்சினைகளும் உருவாகி செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் நாம் அதை கண்டோம்.குடிப்பழக்கம் உள்ள மனிதர்கள் சிலர் இறந்து விட்டார்கள் சிலர் அந்த பழக்கத்தில் இருந்து மீள முடியாமல் மீண்டும் மதுபானக்கடைகள் திறந்த பொழுது குடிப்பதற்கு பணம் இல்லாத படியால்கடன் வாங்குவோம் வீட்டில் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் பணம் கேட்டு சண்டை இடவும் ஆரம்பித்துவிட்டார்கள். எண்ணற்ற குடும்பத்திலுள்ள பெண்களும் பிள்ளைகளும் கண்ணீரோடு வேதனையோடும் அழுது கொண்டிருக்கிறார்கள். ஊரடங்கும் மூலமாக இரண்டு மாதங்களாக சம்பளம் இல்லாமல் தினமும் கூலி பெறகூடிய ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. சிலர் வீட்டு வாடகைக்கும் சிலர் வங்கியில் வாங்கிய கடனுக்கும் சிலர் வீடு கட்டிய கடனுக்கும் சிலர் கல்விக் கடனுக்கும் சிலர் வாகன கடனுக்கம் மின்சார கட்டணம் கட்ட வேண்டியதற்க்கும் கட்ட வேண்டிய தொகையை கட்ட முடியவில்லை அரசாங்கம் வங்கி கடன்கள் எல்லாம் மூன்று மாதம் தவணை கொடுத்திருந்தார்கள் ஆனால் மூன்று மாத முடிவில் வட்டியோடு சேர்த்து கட்ட வேண்டும். என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஏழை நடுத்தர தனியார் வேலையில் உள்ள மக்கள் அத்தியாவசிய பொருளுக்கும் பொருளாதார தேவைகளுக்கும் தடுமாறிப் போனார்கள். ரேஷன் கடையில் 2 மாதம் உணவுப் பொருட்கள் இலவசமாக தந்தார்கள் ஆயிரம் ரூபாய் பணம் தந்தார்கள்.எண்ணற்ற பொருளாதார நெருக்கடியில் அரசு தந்த ஆயிரம் ரூபாய் சிறு உதவியாக பையனாக இருந்தாலும் மற்ற தேவைகளுக்காக மக்கள் மிகவும் பாதிக்கப் பட்டார்கள். இந்தத் நோய் தோற்று காரணமாக மக்கள் மிகுந்த பயத்திற்க்கும் கலக்கத்திற்கும் ஆளாகி இருக்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் வட மாநிலத்து மக்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். தூத்துக்குடி மற்றும் வடமாநிலத்தவர் அதிகமுள்ள மாவட்டங்களில் உள்ளே அனுப்பும் பொழுது கட்டுப்பாடில்லாமல் கூட்டநெரிசல் லோடு கலந்து செல்கிறார்கள் மற்றும் சில மாவட்டங்களில் மக்கள் ஒரு ஒத்துழைப்பு இல்லாதபடி உயிர் பயம் இன்றி கூட்டமாக நெருக்கமாக பயணப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் மீண்டும் நோய் தொற்று அதிகமாக படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நடுத்தர ஏழை வறுமை மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும். சென்னையில் இந்த தொற்று பரவல் அதிக அதிகமாக பரவாதபடிக்கும் மற்ற மாநிலங்களிலும் மக்கள் அதிக அதிகமாய் கூட்ட நெரிசலில் வராத படிக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கு சரி செய்யப்பட்டு மக்கள் சராசரி வாழ்க்கை ஆரம்பிக்கும் பொழுது குழந்தைகளுடைய கல்வி கட்டணம் மற்றும் மீண்டும் வரும் மாதங்களில் வாடகை மின்சார கட்டணம் என்று பலவித நெருக்கடிகளுக்கு மக்கள் ஆளாகி உள்ளார்கள் மீண்டும் மதுபானக்கடைகளை திறக்கும் பொழுது குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விடமுடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் வருமானம் இல்லாமல் இருக்கும் பொழுது குடிப்பதற்கு பணம் வேண்டும் அதற்காக மனைவியையும் பிள்ளைகளையும் துன்புறுத்தப்படும் மற்றும் ஏதாவது தவறான வழிகளில் இறங்கி விடக்கூடும் இந்த சூழ்நிலைகளிலிருந்து அவர்களை காப்பாற்ற மற்றும் அந்த மக்களின் தேவைகளை சீர்செய்ய ஈரம் விளைந்த நல் இதயம் கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் எடப்பாடி பழனிச்சாமி ஐயா அவர்கள் தமிழகத்தின் சூழ்நிலையையும் தமிழக மக்களின் வேதனையான நெருக்கடியான சூழ்நிலைகளையும் தமிழக மக்களின் கண்ணீரையும் கருத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுத்து உதவி செய்திடுமாறு தமிழக மக்களின் சார்பாக மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் சார்பாகவும் வேண்டிக் கொள்கிறோம்.
மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம்.. தலைவர்.டாக்டர்.பொ.ப. பாலசுப்ரமணியன்.

