தலைமைச் செயலக பத்திரிகையாளர் சங்கத்தின் கோரிக்கையை நிறைவேற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம், சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துள்ளது.
தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் சென்னை, மாநிலத் தலைவர் எம் கண்ணன், மாநில பொதுச் செயலாளர் சி பி கிருஷ்ணன், மாநில பொருளாளர் கே எஸ் முருகன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்,
பத்திரிகையாளர்கள் அனைவரையும் முன்கள பணியாளர்களாக அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களது நலனில் தனி அக்கறை யோடு செயல்படும் தமிழக அரசுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் பத்திரிக்கையாளர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

தமிழக பத்திரிகையாளர் அனைவருக்கும் கொரோனா நிவாரணத் தொகையாக தலா ரூபாய் 5 ஆயிரம் மற்றும் கொரோனா தொற்று மூலம் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் என்று அறிவித்த தமிழக முதல்வருக்கு தலைமைச் செயலக பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

