கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், ஏழை, எளிய மக்கள், உணவின்றி தவிப்பவர்கள் மற்றும் அத்தியாவசியத் தேவை வேண்டுபவர்களுக்கு வீடு தேடி வந்து உதவுவதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை 24 மணி நேரமும் இயங்கும் புதிய சேவை துவக்கம் – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அறிவிப்பு.
தற்போது கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள், ஏழை, எளிய மக்கள் மற்றும் உணவின்றி தவிப்பவர்கள் உட்பட பொதுமக்கள் யாருக்காவது அத்தியவசியத் தேவைக்காக கூட வெளியே செல்லமுடியாதவர்கள் உதவிகள் தேவைப்பட்டால், அவர்களுக்கு 24 மணி நேரமும் உதவி செய்வதற்கு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. இளங்கோவன் அவர்கள் தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்பிரிவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் துவக்கி வைத்துள்ளார்.
ஆகவே உதவிகள் தேவைப்படும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் அதில் செயல்படும் செல்போன் எண் 95141 44100 என்ற எண்ணிற்கு எந்த நேரத்திலும் அழைத்து உதவிகள் கேட்டால், அதைச் செய்வதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர். ஆகவே தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அன்புடன் தெரிவித்துள்ளார்.

