மோகன் சி.லாசரஸ் குறித்து ஆபாசமான, அருவருப்பான வார்த்தைகள் பேராயர் காட்பிரே வாஷிங்டன் நோபுள் தம்பதி மீது இயேசு விடுவிக்கிறார் அறக்கட்டளை டிரஸ்டி டாக்டர் அன்புராஜ் புகார் !! மேலப்பாளையம் போலீஸ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வலைவீசி தேடிவருகின்றனர்.
திருநெல்வேலி,மே.17
முகநூல்,யூடியூப் பக்கங்களில் டாக்டரை அவதூறாக பேசி, மிரட்டல் விடுத்த பேராயர் காட்பிரே வாஷிங்டன் நோபிள் மீது மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி தெற்கு புறவழிச்சாலையில் பீஸ் ஹெல்த் சென்டர் நடத்தி வருபவர் ராஜநாயகம் மகன் டாக்டர் அன்புராஜன் (வயது 54). இவர் தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளையில் டிரஸ்டியாகவும் இருந்து வருகிறார்.
டாக்டர் அன்புராஜன் மேலப்பாளையம் காவல்
நிலையத்தில் காவல் ஆய்வாளர் இடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-உலகத்தில் உள்ள இலட்சக் கணக்கான கிறிஸ்தவ மக்களும்,
அனைத்து மக்களும் இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் ஊழியத்தின்மீது மிகுந்த மரியாதையும்,நம்பிக்கையும் உள்ளவர்களாக இருந்து வருகிறார்கள். ஆனால் மோகன் சி.லாசரஸ் மீது பேராயர் காட்பிரே வாஷிங்டன் நோபிள் அவரது மனைவி அருள்மதி ஏசுவடியாள் தூண்டுத லின்பேரில் அவரதுபெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையிலும்,
மிரட்டும்
வகையிலும் தனது முகநுல் பக்கங்களிலும், யூடியூப் சேனல்களிலும் 15 நிமிடங்கள் ஓடும் வீடி யோக்களை தினமும் வெளியிட்டு வருகிறார்.இது எனக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் கடந்த 21.04.2020 அன்று யூடியூப்பில் வெளியிட்டுள்ள ஆடியோ கிளிப்பில் மோகன் சி.லாசரஸ் குறித்தும்,இயேசுவிடுவிக்கிறார் சபையை குறித்தும் ஆபாசமான, அருவருப்பான வார்த்தைகளினால் அதில் கூறியுள்ளார். இது போன்ற அசிங்கமான, அருவருப்பான அவமானப்படுத்தக்கூடிய வார்த்தைகளைபேச தனதுமுகநூல் பக்கங்களிலும், யூடியூப் பக்கங்களிலும் வெளியிட்டு வருவதினால் எனக்கும், என் போன்ற டிரஸ்டிகளுக்கும், மனவேதனையும், மன உளைச்ல்களும், மிரட்டும் வண்ணமாகவும் அமைந்துள்ளது.
எங்கள் மீது அன்புகொண்ட கிறிஸ்தவ மக்கள் சமூக வலைத்தளங் களில் இதனைப் பார்த்து எங்களிடம் தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் கேட்டு வருவதால் எங்களுக்கு அவமானமும்,
தலைக்குனிவும் மிகுந்த சங்கடமும் ஏற்பட்டுள்ளது.
எனவே பேராயர் காட்பிரேவாஷிங்டன் நோபுள் மற்றும் அவரது மனைவி அருள்மதி ஏசுவடியாள் ஆகியோர் கிறிஸ்தவ மதத்தையும்;, நான் சார்ந்த இயேசு விடுவிக் கிறார் ஊழியத்தையும் அதன் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் ஆகியோரை இழிவுப்படுத்தியும்,அவமானப்படுத்தியும்,என் போன்ற நிர்வாகிகளுக்கும்,உலகம் முழு வதிலுமுள்ள விசுவாசிகளுக்கும் மனவேதனையும்,
மிரட்டும் விதமாக பேசி முகநூல், யூடியூப் பக்கங்களில் வெளியிட்டு வருவதும் குறித்து சட்டநடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.மனுவினை பெற்றுக்கொண்ட மேலப்பாளையம் போலீசார் 292 (a),506 (1) ஆகிய பிரிவுகளின்கீழ் பேராயர் காட்பிரே வாஷிங்டன் நோபுள், அவரது மனைவி அருள்மதி ஏசுவடியாள் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். 

