கடைய நல்லூர் காவல் துறை சார்பில்” பசிக்கிறதா எடுத்துங்கோங்க”
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் துவக்கி வைத்தார்
கடையநல்லூர் மே 25 தென்காசி மாவட்டம் கடைய நல்லூர் காவல் துறை மற்றும் வன உயிர் மற்றும் இயற்கை ஆர்வலர் இணைந்து கொரானா பெருந்தொற்று காலத்தில் சாலை ஓர தங்குபவர்கள் மற்றும் ஏழை எளியவர்கள் பசியோடு இருக்கக் கூடாது என்ற உன்னதமான மனிதாபிமான அடிப்படையில் பசிக்கிறதா எடுத்துக்கோங்க என்ற நிகழ்வை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் துவக்கி வைத்தார் கடையதல்லூர் காவல் ஆய்வாளர் விஜயகுமார் உதவி ஆய்வாளர் விஜயகுமார் சமூக ஆர்வலரும் வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாவலருமான சினேக்சேக் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சேகர் மாரிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்
பகிக்கு தா எடுத்துங்கோங்க உணவை வீண் விரயம் செய்யாதீர் என்ற உயரிய கொள்கையோடு கொண்ட இந் நிகழ்வை துவக்கிய சுகுணா சிங் இது குறித்து கூறியதாவதுகாவல் துறை உங்கள் நண்பன் என்பது ஏட்டிலும் எழுத்திலும் இருப்பது போல் நிகழ்விலும் உண்மை என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வே வன உயிர் மற்றும் இயற்கை ஆர்வலர் சினேக் சேக் முயற்சியில் இந்த அருமையான திட்டம் நடைபெறும் வேளையில் காவல்துறையும் அதில் இணைந்து பயணிக்கி றது கொரானாவை ஒழிக்கும் பணியில் அரச க்கு வருவாய் துறை காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் ஒத்துழைப்பதை விட பொதுமக்களின் ஒத்துழைப்பு தான் மிகவும் தேவையானது தளர்வு கற்ற ஊரடங்கு இன்று முதல் துவங்கப் பட்டுள்ளது தேவையின்றி அத்தியாவசிய பணிகளை தவிர தெரு மற்றும் ரோட்டில் இரு சக்கரம் மற்றும் ஆட்டோ கார்களில் சுற்றி திரிபவர்கள் விசாரிக்க படுவதுடன் வாகனங்கள் பறிமுதல் செய்ய்ப் படுவதுடன் வழக்கு பதியப்படும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றம் செல்லும் நபரின் வாழ்க்தை கேள்வி குறியாகும் என்பதில் மாற்றமில்லை
ஆகவே பொது மக்கள் அரசுக்கும் காவல்துறைக்கும் ஒத்துழைப்பு வழங்குவதுடன் தளர்வு களற்ற ஊரடங்கை ஒரு வாரம் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு இக்கட்டான இத்தருணத்தில் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்ற உயர்ந்த நோக்கமே இத்திட்டத்தின் சிறப்பு என கூறி நகர் மன்றம் மூலம் கப சுர குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையும் கடையநல்லூர் காவல் துறை மற்றும் வன உயிர் இயற்கை ஆர்வலர் இணைந்து மூன்று வேளையும் இவ் விடத்தில் உணவு வைக்கப்பட்டிருக்கும் வீண் விரயம் செய்யாமல் உண்ணுவதற்கு பயன் டுத்திக் கொள்ளலாம் மேலும் தென்காசி மாவட்ட எல்கைக்குள் வரும் வழியில் நிரந்தரமாக 9 சோதனை சாவடிகளும் ஒரு காவல்நிலைய எல்லைக்குள் இருந்து மற்றொருகாவல் நிலைய எல் கைக்குள் நுழையும் இடங்களில் 15 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். நிகழ்ச்சியின் இறுதியில் முன் களப்பணியாற்றும் காவல் துறையினர் ஊடகத்துறையினர் தங்களை கொரானா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும் எனக் கூறி முக்கவசம் சாகிடைகர் வழங்கினார். இறுதியில் வன உயிர் மற்றும் இயற்கை ஆர்வலர் சினேக்சேக் நன்றி கூறினார்


