சேரன்மகாதேவியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
சேரன்மகாதேவி பஸ் நிலையம் அருகே சேரன்மகாதேவி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கபசுர குடிநீர் மற்றும் முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
.சேரன்மகாதேவி பேரூராட்சி செயல் அலுவலர் காதர் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு குறித்த பிரச்சாரம் செய்யப்பட்டது.
கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த தாசில்தார் பார்கவி தங்கம், காவல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அஜித்குமார், பேரூராட்சி அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

