சேரன்மகாதேவியில் நடமாடும் காய்கறி விற்பனை மையம் துவக்கம்.
சேரன்மகாதேவி பேரூராட்சி சார்பில் நடமாடும் காய்கறி விற்பனை மையம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேரன்மகாதேவி தாசில்தார் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
சேரன்மகாதேவி பேரூராட்சி செயல் அலுவலர் காதர் முன்னிலை வகித்தார்.
முன்னதாக நடமாடும் காய்கறி விற்பனை வாகன ஓட்டுநர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு பேரூராட்சி சார்பில் கையுறை, முகக் கவசம், சானிடைசர் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
இதில் வருவாய் துறையினர், பேரூராட்சி அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
.

