கொடைக்கானலில் 2 வது கட்டமாக இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் மேலும் 1000 ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது.
டி.எஸ்.பி ஆத்ம நாதன் கலந்துகொண்டு நிவாரண பொருள் வழங்கினர்.
————-
கொடைக்கானல், மே, 16
கொடைக்கானல் பகுதியில் உள்ள ஏழை, எளிய பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் நிவாரண பொருட்கள் இன்று 2 வது கட்டமாக சுமார் 1000 பேருக்கு நிவாரண பொருள் வழங்கப்பட்டது.
கொரோனா வைரஸ் உலகத்தையை புரட்டி போட்டுள்ள நிலையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமுலில் இருந்து வருகிறது இதனால் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கபட்டு உள்ளது. அன்றாடம் வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வரும் பல ஏழை, எளிய மக்கள் மிகவும் வறுமையில் இருந்து வருகின்றனர்.
இதனை போக்கும் வகையில் நாடு முழுவதும் தொண்டு நிறுவனம், அறக்கட்டளை, சமூக அமைப்புகள் பல்வேறு அரசியல் கட்சியினர், தொழில் அதிபர்கள், மனித நேயமிக்க நல்ல உள்ளங்கள் ஆகியோர் நாட்டில் அணைத்து பகுதிகளிலும் உணவு பொருள்கள், காய்கறி, அரிசி, ஆகியவை வழங்கி வருகின்றனர். அந்த அடிப்படையில் கொடைக்கானல் பகுதியில் உள்ள 
மலைவாழ் மக்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டி, புகைப்படகாரர்கள், சிறு குறு நடை பாதை வியாபாரிகள் மற்றும் ஏழை, எளிய கொடைக்கானல் பகுதியில் உள்ளவர்களுக்கு
உதவி செய்யும் நோக்கில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் முடிவு செய்தனர். நாம் தமிழர் கட்சியினர் தங்களது கட்சி சார்பில் இது போன்று மற்ற பேரிடர் காலகட்டத்திலும் பல்வேறு நிவாரண
பணிகள் செய்து உள்ளனர்.அந்த அடிப்படையில் இந்த கொரோனா பாதிப்பான பேரிடர் காலகட்டத்திலும்
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவிடுமாறு கட்சி தலைவர் சீமான் அவர்கள் அறிவுறுத்தலின் பெயரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பல மாவட்டங்களில் நிவாரண பொருள் வழங்கி
வருகிறார்கள்
அந்த அடிப்படையில் 
14/05/2020 அன்று முதற்கட்டமாக கொடைக்கானல் பகுதியில் உள்ள சுமார் 500 மலைவாழ் மக்கள் மற்றும் ஏழை, எளியமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் வினோத் ராஜசேகர் தலைமையில் கொடைக்கானல் காவல் ஆய்வாளர் ராஜசேகரன் அவர்கள் முன்னிலையில் சுமார் 500 குடும்பங்களுக்கு காய்கறிகள் அரிசி பலசரக்கு சாமான்கள்
அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து 2 வது கட்டமாக இன்று 16/05/2020 அன்று கொடைக்கானல் பகுதியில் உள்ள பல்வேறு
தரப்பினருக்கு சுமார் 1000 பேருக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருள் பேருந்து நிலைய வளாகத்தில் வைத்து பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கொடைக்கானல்
டி.எஸ்.பி ஆத்ம நாதன் அவர்கள் பங்கேற்று நிவாரண பொருள் வழங்கும் நிகழ்ச்சி யை துவங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தொகுதி தலைவர் பிரவீன் குமார் நகர தலைவர் அபுதாஹீர் நகரச் செயலாளர் ஃபெலிக்ஸ் பொருளாளர் மைக்கேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்வில் பொது மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஏராளமானோர் வரிசையாக நின்று நிவாரண பொருள்கள் பெற்று சென்றனர்.
இது போன்ற பேரிடர் காலகட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் நிர்வாகிகள் மனித நேயத்தோடு ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து அரிசி உள்ளிட்ட நிவாரண பொருள் வழங்கியது
செய்தி தொகுப்பு கொடைக்கானல்
வி. ஆனந்த

