தமிழக அரசு இன்று முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாநகர் முக்கிய பகுதிகளில் நடைபெறும் போலீசாரின் வாகன சோதனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு.
கொரோனா 2வது அலையை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு இன்று (24.05.2021) முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அமலுக்கு வந்ததையடுத்து, ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றி வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.*
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. ஊரடங்கு உத்தரவை மீறி வாகன சோதனையில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் முக்கிய பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ரோந்து சென்று, வி.வி.டி சந்திப்பு மற்றும் குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பு ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக சென்று, அங்கு நடைபெறும் வாகன சோதனையை ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பேசுகையில் தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் பணியில் தூத்துக்குடி மாவட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் 23 இடங்களிலும், மாவட்டத்தில் 64 இடங்களிலும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. தேவையில்லாமல் வெளியே செல்எவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் இந்த ஒரு வார காலத்திற்கு பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம். இந்த ஒரு வார காலத்திற்கு பொதுமக்கள் அரசுக்கும், காவல்துறைக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வின் போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோபி, தென்பாகம் காவல் ஆய்வாளர் திரு. ஆனந்தராஜன், வடபாகம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) திரு. ராமகிருஷ்ணன் உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

