கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே அதிவேகமாக வந்த டிப்பர் லாரியால் 200 அடி பள்ளத்தில் பாய்ந்த இளைஞன்!!
தன் உயிரைப் பொருட்படுத்தாமல் சிறுவனை 200 அடி பள்ளத்தில் இறங்கி காப்பாற்றிய 2 பேருக்கு கொடைக்கானல் மக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிகிறது
கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது இந்த பகுதியில் வரும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் பல இந்தப் பகுதியில் நடைபெறுகிறது
கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே தடுப்புச் சுவர்கள் இல்லாமல் காணப்படுகிறது இந்த பகுதியில் நேற்று மிக வேகமாக வந்த டிப்பர் லாரியால் இரு சக்கர வாகனத்தில் எதிரே வந்த இளைஞன் நிலைதடுமாறி கீழே விழுந்தான் தடுப்புச்சுவர் இல்லாத தால் 200 அடி பள்ளத்தில் சுமார் 20 அடி ஆழம் தண்ணீர் இருக்கும் பகுதியில் அந்த வழியாக வந்த சமூக ஆர்வலர் பேத்துப்பாறை மகேந்திரன் உடனடியாக தன் உயிரையும் பொருட்படுத்தாமல் இளைஞரையும் வாகனத்தையும் இரண்டு மணி நேரம் போராடி மீட்டார் அவருக்கு உதவியாக ஒர்க் ஷாப் நடத்தி வரும் வினோத் என்பவரும் உதவிகரமாக இருந்து இந்த மீட்பு பணியில் ஈடுபட்டனர் 200 அடி பள்ளம் 20 அடி நீரோட்டம் உள்ள இந்த பகுதியில் தீயணைப்புத்துறை அதிகாரிகள் மிகவும் சிரமப்பட்டு செய்யவேண்டிய பணியினை சமூக ஆர்வலர் பேத்துப்பாறை மகேந்திரன் மற்றும் வினோத் ஆகியோரின் மனிதநேயத்தை கொடைக்கானல் பகுதி மக்கள் மனதாரப் பாராட்டினார்கள் மேலும் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே மிக வேகமாக செல்லும் நான்கு சக்கர வாகனங்களால் ஏற்படும் விபத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவில் இந்தப் பகுதியில் போலீசார் நிரந்தரமாக ஒருவர் நிறுத்து அதிவேகத்தில் வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலங்களில் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் இந்தப் பகுதியில் பல இடங்களில் தடுப்பு சுவர் இல்லாததால் காவல்துறையினர் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை பொதுமக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
செய்தி தொகுப்பு கொடைக்கானல் வி ஆனந்த்

