விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்களின் அறிவுரைப்படி உட்கோட்டம் முழுவதும் காவலர்கள் உஷார் நிலையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
விளாத்திகுளம் அருகே உள்ள ராமச்சந்திராபுரம், புதுக்கிராமம், லட்சுமிபுரம் ஆகிய கிராம பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. காவலர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி அந்தப் பகுதிகளில் வாகனத் தணிக்கை செய்தபோது அந்த வழியாக வந்தTN 65 BZ 6067 என்ற லோடு வேனை சோதனை செய்தபோது அதில் 40 கிலோ எடையுள்ள 55 மூட்டை ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரியவந்தது. மேலும் வாகனத்தை ஓட்டிவந்த ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த நமச்சிவாய மகன் நாகநாத சேதுபதி கடத்தியது தெரியவந்தது. மேலும் ரேஷன் அரிசி கடத்திய நபரையும், அதற்கு பயன்படுத்திய வாகனத்தையும் காவல் நிலையம் கொண்டு வந்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறப்பாக செயல்பட்டு ரேஷன் அரிசி கடத்திய நபரை விரைவாக பிடித்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.


