நெல்லை டவுன் பகுதியில் உள்ள ஏழை எளிய 200குடும்பங்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை அதிமுக முக்கிய பிரமுகர் சுதாk பரமசிவன்-பரணி சங்கரலிங்கம் வழங்கினர்
கொரோனா வைரஸ் உலகத்தையை புரட்டி போட்டுள்ள நிலையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமுலில் இருந்து வருவதால் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கபட்டு உள்ளது.இதனால் அன்றாடம் வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வரும் பல ஏழை, எளிய மக்கள் மிகவும் வறுமையில் இருந்து வருகின்றனர்.
இதனை போக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர்கள்
அரசியல் கட்சியினர், தொழில் அதிபர்கள், மனித நேயமிக்க நல்ல உள்ளங்கள் ஆகியோர் நாட்டில் அணைத்து பகுதிகளிலும் தொடர்ந்து உணவு பொருள்கள், காய்கறி அரிசி ஆகியவை வழங்கி வருகின்றனர். அந்த அடிப்படையில் இந்த பேரிடர்காலங்களில் மிகவும் கஷ்ட சூழ்நிலையில் உள்ள நெல்லை டவுன் பகுதியில் உள்ள ஏழை எளிய 200குடும்பங்களுக்கு
இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆசியுடனும் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் மாண்புமிகு ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க
நெல்லை டவுன் செண்பக பிள்ளை தெரு,கன்னியாகுடித்தெரு பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களின் குடும்பத்திற்கு தேவையான அரிசிப் பைகளை அதிமுக அமைப்புச் செயலாளரும் மாவட்ட ஆவின் சேர்மனுமான சுதா K பரமசிவன் மற்றும் நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக அவைத் தலைவரும் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினருமான பரணி சங்கரலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு தலா 5 கிலோ அரிசி பைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் நெல்லை பகுதி செயலாளர் மோகன்,
சந்திரசேகர் வட்டச்செயலாளர் தலைமலை கணேசன் முத்துப்பாண்டி குருசாமி நல்லகண்ணு முத்தையா நயினா முத்துராஜ் எம்.கே ராஜா தச்சை பாலு ஆட்டோ குமார் மாரிமுத்து, பிளம்பர் பரமசிவன், பட்டாசு பாலு,தாமஸ்பாண்டியன் தங்கதுரை முருகன் சித்திரைகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு நெல்லை கொம்பன் ராஜ்

