பெருநகர சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர்கள் சங்கத்தினர் கொரோனா நிவாரண நிதியாக 1.10 லட்சம் ரூபாய்க்கான வரைவு காசோலையை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அவர்களிடம் சங்க தலைவர் உதவி பொறியாளர் பாலமுத்துராமன் அவர்களின் தலைமையில் வழங்கினார்கள்.
கொரோனா பணிகள் சிறப்பாகவும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர்கள் சங்கத்தினரின் முழு ஒத்துழைப்பையும் வழங்க உறுதி கூறுகிறோம் என ஆணையரிடம் தெரிவித்தனர்.

