தமிழன்டா கலைக்கூடம் மற்றும் தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் ஏற்பாட்டில் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது. கீழ ஈராலில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் பங்கேற்று சிறப்பு செய்தார்
தூத்துக்குடி தமிழன்டா கலைக்கூடம் மற்றும் தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் ஏற்பாட்டில் தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட கீழ ஈரால் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதர நிலையம் எதிரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்து எப்போதும் வென்றான்,கீழ ஈரால்,தம்பாள்யூரணி , உட்பட சுற்று வட்டார கிராமத்தில் வசித்து வரும் நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதாரம் மிகவும் பின் தங்கி இருக்கின்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் நாட்டுப்புறக் கலைஞர்களை கைதூக்கி விடுவதற்கு கீழ ஈரால் காமாட்சி அம்மன் திருக்கோவில் அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்து கோவில்பட்டி சென்னை வாழ் நண்பர்கள் பொருளுதவி வழங்கியதன் பேரில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் தலைமை ஏற்று 50க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அரிசி,பருப்பு, மசாலா சாமான்களை வழங்கினார்
இந்த நிகழ்வில் விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ், எட்டயபுரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த எட்டையபுரம் காவல் ஆய்வாளர் ஜவான் ,காவல் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் போலீசார் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் தமிழன்டா கலைக்கூடம் தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் இயக்குனர் ஜெகஜீவன் ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் தமிழன்டா கலைக்கூடத்தின் ஆலோசகர்கள் பிரம்ம ராஜ்,கதிர்வேல் உட்பட தமிழன்டா கலை கூட மாணவர் தலைவர் கார்த்திக், தமிழன்டா கலை கூட செயலாளர் திருமணி ராஜா, தமிழன்டா கலைக்கூடம் துணைச் செயலாளர் மந்திரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். குருகுலத்துக்கு வழங்கிய பொய்யாமொழி ராஜா மற்றும் அவரது நண்பர்களுக்கு தமிழன்டா கலைக்கூடம் தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் சார்பில் பாராட்டு சான்றிதழ் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களது கரங்களால் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது

