போலீஸ் செய்தி இணையதள தொலைக்காட்சி உதவி ஆசிரியர் A.சையத் அலி சார்பில் MMD காலனி PT நகரில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு ” நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கப சுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் நாளுக்குநாள் உயிரழப்பு அதிகரித்து வருகிறது.
தடுப்பு மருந்து இல்லாததால் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில் கபசுர குடிநீர் அருந்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என சித்தா மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் கபசுரக் குடிநீரை அருந்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக அவர்கள் நாட்டு மருந்து கடைகளுக்கு அலைந்து வருகின்றனர்.
இதையடுத்து
போலீஸ் செய்தி இணையதள தொலைக்காட்சி
யின் நிர்வாக ஆசிரியர் C.P.கிருஷ்ணன் ஆணைக்கிணங்க அதன் உதவி ஆசிரியர் A.சையத் அலி ஏற்பாட்டில் MMD காலனி PT நகரில் உள்ள ஒவ்வொரு வீடு வீடாக நேரில் சென்று பொதுமக்களுக்கு ” நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கப சுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கி னார்.
பொது மக்கள் அனைவருக்கும் ” கரோனா வைரஸ்” லிருந்து தற்காத்துக்கொள்ள ‘மாஸ்க்’ மற்றும் ‘கப சூர’ குடிநீர் இலவசமாக அளிக்கப்பட்டது இந்த நிகழ்வில் பப்ளிக் ரிப்போர்ட்டர் சிறப்பு நிருபர் பாபு, நிருபர் மோகன்
உட்பட ஏராளமான பத்திரிகையாளர்கள் பங்குபெற்றனர்.
இந்த கொரோனா வைரஸ் தொற்று காலகட்டத்தில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்திகள் சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் இவர்கள் அதற்கு மேலாக அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கில் வீடு வீடாக சென்று கப சுர குடிநீர் வழங்கிய பணி அப்பகுதியில் உள்ள
.போலீஸ் செய்தி இணையதள தொலைக்காட்சி உதவி ஆசிரியர் A.சையத் அலி காஜா புயல் போன்ற பேரிடர் காலகட்டத்திலும் இது போன்று பொது மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து கொடுத்தவர். அந்த அடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்று வந்து விடக்கூடாது என முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களுக்கு கப சுர குடிநீர் வழங்கினர். இவரின் மனித நேய பணிக்கு போலீஸ் செய்தி டிவி குழுமம் சார்பில் மனதார வாழ்த்துகிறோம்
செய்தி தொகுப்பு
சென்னை மாவட்ட தலைமை நிருபர்
செந்தில் குமார்

