திருப்பத்தூர் மாவட்டம் வானியம்பாடி நியூ டவுன் மற்றும் பஸ் நிலையம் அருகில் போக்குவரத்து ஆய்வாளர் கமலக்கண்ணன், மற்றும் நகர காவல் உதவி ஆய்வாளர்
(சட்டம் & ஒழுங்கு)உதவி ஆய்வாளர் திருமதி பாரதி தலைமையில் ஊரடங்கை முன்னிட்டு வாகன சோதனை நடைப்பெற்றது.
இதில் இ பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதமும் விதிக்கப்பட்டது.
மாவட்ட காவல் கண்கானிப்பாளர் விஜயகுமார் மற்றும் துணை கண்கானிப்பாளர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.
அங்குள்ள காவல் துறையினர்க்கு ஊட்டச்சத்து பாணம் மற்றும் முகக்கவசங்களை வழங்கினார்கள்.

