சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை பின்பற்றாமல் அத்தியாவசிய தேவை இன்றி வந்த இருசக்கர வாகனங்களைபறிமுதல் செய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் நாளுக்கு நாள் நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அரசு பல கட்டுப்பாடுகளையும், விழிப்புணர்வுகளையும், மக்களுக்கு வழங்கி வந்த போதிலும் தகுந்த காரணமின்றி சாலைகளில் வந்த இருசக்கர வாகனங்களை காவல்துறை துணை கண்காணிப்பாளர்பொன்.ரகு அறிவுறுத்தலின் பேரில் காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி ,சார்பு ஆய்வாளர் மலைச்சாமி, போக்குவரத்து ஆய்வாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் நகரின் முக்கிய பகுதிகளான பெரிய கடை வீதி, பேருந்து நிலையம், அண்ணா சாலை, போன்ற பகுதிகளில் வாகன சோதனையில் விதிமுறைகளை பின்பற்றாத சுமார் ஏழு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததோடு, 26 நபர்கள் மீது ஊரடங்கை பின்பற்றாத வழக்கும் பதிவு செய்தனர். மேலும் தற்சமயம் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும், எனவே விழிப்புணர்வோடு வீட்டிலே இருக்கவேண்டும் என்றும் அறிவுரைகளும் வழங்கினார்.
மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்


