சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தற்பொழுது கொரோணா அதிவேகமாக பரவி வருவதால் தினசரி மார்க்கெட் அடைக்கப்பட்டது. சிலம்பணி ஊரணி அருகில் தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு காய்கறி கடைகளுக்கு மட்டும் அனுமதி அளித்திருந்தது நகராட்சி பொறுப்பு ஆணையாளர் மதுசூதனன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் தற்காலிக தினசரி மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்ட பொழுது மார்க்கெட்டில் பழக்கடைகள் பூக்கடைகள் திறந்திருந்தது அந்த கடைகளை எச்சரிக்கை செய்து பின்னர் அனுமதி இல்லமால் போடப்பட்ட கொட்டகை பிரிக்கப்பட்டது. மேலும் மளிகை கடைகள் சூப்பர் மார்க்கெட்டுகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வியாபாரம் செய்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர் . கொரோணா பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
மாவட்ட செய்தியாளர்
தேவகோட்டை கண்ணன்


