“கொடுஞ்செயல் எதிர்ப்பு” தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் மே 21ம் தேதியன்று கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. அதன்படி இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் கீழ்கண்டவாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ்செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம். எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றைப் போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறு விளைவிக்கும் பிரிவினைச் சக்திகளை எதிர்த்துப் போராடவும் நாம் உறுதி கூறுகிறோம்” என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.*<br>
<br>
*♻️இதில் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் நிர்வாக அதிகாரிகள் திரு. சுப்பையா, திரு. சங்கரன், அலுவலக கண்காணிப்பாளர்கள் திரு. மாரிமுத்து, திரு. மாரியப்பன், திரு. அருணாச்சலம், திரு. கணேச பெருமாள், திரு. மாரிமுத்து மற்றும் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தகவல் பதிவு உதவியாளர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.*


