நம் இந்தியாவில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளான மே 21 ஆம் தேதி இன்று வருடா வருடம் காவல்துறை சார்பில் உறுதிமொழியை ஏற்று வரும் நிலையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று பின்வரும் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
அகிம்சை, சகிப்புத் தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுமைகளையும், வன்முறைகளையும் முழு ஆற்றலுடன் எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம். எல்லா மக்களிடத்தும் அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றை போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறு விளைவிக்கும் பிரிவினை சக்திகளை எதிர்த்து போராடவும் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் துணை காவல் கண்காணிப்பாளர் கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

