சாயர்புரத்தில் முக கவசம் மற்றும் கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்ச்சி சாயர்புரம் மெயின் பஜாரில் வைத்து முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 30வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் சாயர்புரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜேக்கப் முன்னிலை வகித்தார் தெற்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் எஸ்விபிஎஸ் ஜெயக்குமார் சாயர்புரம் திமுக செயலாளர் அறவாழி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்


