நெல்லை மாநகரில் சுற்றுச் சுவர்களில் விளம்பரங்களும், ஜாதி, மதம் சார்ந்த வாசகங்களும்,சுவரொட்டிகளும் அதிகம் காணப்படும். இது சில சமயம் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். நிலையில் நெல்லையில் உள்ள சுவர்களை சென்னையில் இருப்பதைப் போல சுற்றுச் சுவர் ஓவியங்கள் வரைந்து அழகு படுத்தி விட வேண்டும் என்ற நோக்கத்தில் இம்முறை தேர்தலின் போது தேர்தல் நடத்தை விதியின்கீழ் சுவர்கள் சுத்தமாக்கப் பட்டதோடு,கொரோனாவிழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்்என்ற எண்ணத்தில் நெல்லை ஓவியர் சங்கம் மற்றும் அன்னை தெரசா அறக்கட்டளையுடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு,சாலை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் திருநெல்வேலியின் சிறப்பு ஆகிய தலைப்புகளில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது. இதன்மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு தேவையற்ற விளம்பரங்களும்,
பிரச்சனைக்குரிய பிரச்சாரங்களும் தவிர்க்கப்படும். சங்க காலத்திலிருந்து வரலாறு கொண்ட நெல்லையை சுத்தமாகவும், அமைதியாகவும், அழகாகவும் பேணி காப்பது நம் எல்லோருடைய கடமையும் ஆகும்.மக்களின் துணையோடு நெல்லை மாநகர காவல்துறை இந்த பணிகளை தொடங்கி்யுள்ளது

