தூத்துக்குடியில் கரோனா நோயாளிகள் வீட்டைவிட்டு வெளியே வந்தால் எஃப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரோனா நோய் தொற்று தீவிரமாக பரவி வருவதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தடுப்பூசி செலுத்துதல், மருத்துவ முகாம்கள், கிருமிநாசினி தெளித்தல், வீடுகள்தோறும் பொது மக்களின் உடல்வெப்ப நிலையை கண்டறிதல் நோய் தொற்றால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை கண்காணித்தல் மற்றும் ஆலோசனை வழங்குதல், பொது மக்களுக்கு நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியே வருவதாக பல்வேறு புகார்கள் வரப்பெற்றுள்ளது. எனவே பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் இத்தகைய நபர்கள் மீது மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்படுவதுடன் தொற்று நோய் பரவல் மற்றும் பொது சுகாதார விதிகளின் கீழ் காவல் துறை மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்படுவதுடன்
இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து அருகாமையில் வசிக்கும் பொதுமக்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையினை (அலைபேசி எண்: 6383755245, தொலைபேசி எண்: 0461-4227202) தொடர்பு கொண்டு விபரம் தெரிவித்து மாநகராட்சியின் நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு உதவிடுமாறு மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர் அவர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்

