கோவில்பட்டியில் இருந்து எட்டயபுரம், விளாத்திகுளம்,நாகலாபுரம் வழியாக புதூர் வரை
அரசு ஊழியர்கள், வங்கி பணியாளர்கள்,மருத்துவமனை ஊழியர்கள், துப்புறவுபணியாளர்கள் போய்வர அரசுபேருந்து கோவில்பட்டி யில் காலை 8 .30மணிக்கு புறப்பட்டு புதூர் சென்றடையும்.அங்கு யூனியன் அலுவலகத்தில் பஸ் நிறுத்தப்பட்டு இருக்கும்.பின் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு அதே வழித்தடத்தில் கோவில்பட்டி சென்றடையும்.இதனால் அரசு ஊழியர்கள்,வங்கிபணியாளர்கள்,கூட்டுறவு ஊழியர்கள், துப்புறவு பணியாளர்கள் பயனடைந்தனர். இம்முறை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த பேருந்து இயக்கப்படவில்லை. மேற்படி பேருந்தை உடனடியாக இயக்க மாண்புமிகு. அமைச்சர் கீதாஜீவன் அவர்களுக்கும்,விளாத்திகுளம் MLA மார்க்கண்டேயன் அவர்களுக்கும் அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்று
முதல் (19-5-2021 ) பேருந்து கிருமிநாசினி தெளிக்கப்பட்டு இயக்கப்படுகிறது.
பேருந்து தினசரி காலை 8.30 மணிக்கு கோவில்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு எட்டயபுரம், விளாத்திகுளம், நாகலாபுரம் வழியாக புதூர் சென்றடையும். பின்பு மாலை 4.30 மணிக்கு புதூரில் புறப்பட்டு
அதே வழித்தடத்தில் கோவில்பட்டி சென்றடையும்.
இந்த பேருந்தில் சமூக இடைவெளி,முகக்கவசம்,கையுரை அணிய வேண்டும்.அடையாள அட்டை வைத்திருக்கும் அரசு ஊழியர் தவிர வேறு பொதுமக்கள் யாருக்கும் அனுமதி கிடையாது.
மாண்புமிகு அமைச்சர் கீதாஜீவன் அவர்களுக்கும்,சட்டமன்ற உறுப்பினர்மார்க்கண்டேயன் அவர்களுக்கும் அரசு ஊழியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

