குரும்பூர் ஜமாத் சார்பில்
அமைச்சரிடம் கொரோனா
நிதி ரூ.25 ஆயிரம் வழங்கல்
நாசரேத்,மே 19- குரும்பூர் ஜமாத் சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கொரோனா நிதியாக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டு வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதி ஏற்படுத்தி கொடுக்க தமிழக அரசுக்கு நிதி வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து பல்வேறு அமைப்பினரும், தனியார் நிறுவனமும், தனி நபர்களும் கொரோனா நிதி வழங்கி வருகின்றனர். இதேபோல் குரும்பூர் முகைதீன் ஜூம்மா பள்ளி சார்பில் கொரோனா நிதியாக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் ஜமாத்தார்கள் வழங்கினர். இதில் ஆழ்வை., ஒன்றிய செயலாளர் நவீன்குமார், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், குரும்பூர் நகர செயலாளர் பாலம் ராஜன், திருச்செந்தூர் ஒன்றிய நகர செயலாளர் வால்சுடலை, ஜமாத்தார்கள் அலாவுதீன், சேக்முகைதீன், நசீர், ரசீது, ஜவாஹிர், முகைதீன், சோலை நட்டார் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

