விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு இன்று ஆய்வு நடத்தினார்கள்.*
???? *தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கில் நேற்றில் இருந்து மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பதிவு முறை கட்டாயமாக அறிவிக்கப்பட்ட நிலையிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுபடியும் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகில் வாகன சோதனையை ஆய்வு செய்தும், ஊரடங்கு நேரத்தில் வெளியே வருபவர்களுக்கு மாஸ்க் அணிந்துவரவும், ஹெல்மெட் அணிந்து வரும்படியும், ஒலிபெருக்கி மூலம் அறிவுரை வழங்கினார்கள். காவலர்கள் இரண்டு முகக்கவசம் அணியவும், கையுறை ஆகியவை கட்டாயம் அணியவும், மற்றும் பொதுமக்களிடம் கனிவாக பேசவும் அறிவுரை வழங்கினார்கள்.


