கொடைக்கானலில் காவேரி ஸ்பைசஸ் நிறுவனரும் திமுக முக்கிய பிரமுகருமான பி.மோகன் ஏற்பாட்டில் அரிசி, காய்கனி உட்பட நிவாரண பொருட்கள் 500 பேருக்கு வழங்கப்பட்டது.
கொடைக்கானல். மே.11

கொரோனா வைரஸ் உலகத்தை புரட்டி போட்டுள்ள நிலையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமுலில் உள்ள நிலையில் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதால் ஏழை, எளிய மக்கள் மிகவும் வறுமையில் இருந்து வருகின்றனர்
இதனை போக்கும் வகையில் நாடு முழுவதும் தொண்டு நிறுவனம், அறக்கட்டளை சமூக அமைப்புகள் பல்வேறு கட்சியினர் தொழில் அதிபர்கள், மனித நேயமிக்க நல்ல உள்ளங்கள் ஆகியோர் நாட்டில் அணைத்து பகுதிகளிலும் உணவு பொருள்கள், முககவசம், சானிடைசர், ஆகியவை வழங்கி வருகின்றனர்
அந்த வரிசையில் கொடைக்கானலில் எந்த பேரிடர் காலங்களிலும் அந்த பகுதி மக்களுக்கு உடனடியாக உதவி செய்யும் நபராக கொடைக்கானல் காவேரி ஸ்பைசஸ் நிறுவனரும் திமுக முக்கிய பிரமுகருமான பி.மோகன் வழங்குவது வழக்கம். அந்த அடிப்படையில் இந்த கொரோனா தடை உத்தரவு காலகட்டத்தில் உணவு பொருள்கள் உட்பட பல உதவிகள் ஏழை எளிய மக்களுக்கு செய்ய முன்வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அரிசி, காய்கனி உட்பட அத்தியாவசிய பொருட்கள் 500 பேருக்கு பி.மோகன் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மாநில துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி வழிகாட்டுதலின்படி, பழனி சட்டமன்ற உறுப்பின ஐ.பி.செந்தில்குமார் அறிவுறுத்தலின்படி கொடைக்கானல் நகரத்தில் உள்ள எம்.எம் தெரு, நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் திமுக முக்கிய பிரமுகரும் காவேரி ஸ்பைசஸ் உரிமையாளருமான பி.மோகன் ஏற்பாட்டின் பேரில் சுமார் 500 பேருக்கு கொரானா பேரிடர் நிவாரண பொருள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் எஸ்.முகமது இப்ராஹிம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாயக்கண்ணன், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் மற்றும் கழக நிர்வாகிகள் தளபதி செல்வராஜ், தியாகு, வீரமுத்து, கோவிந்த், நகர துணை செயலாளர் மோகன் உட்பட ஏராளமான திமுக நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
செய்தி தொகுப்பு
கொடைக்கானல்
வி. ஆனந்த

