திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க
கொடைக்கானலில் திமுக முன்னாள் கவுன்சிலரும் சக்தி பில்டர்ஸ் உரிமையாளருமான சக்தி மோகன் 5 கட்டமாக சுமார் 5 லட்சம் மதிப்பில் நிவாரண உதவி வழங்கினார்.

கொரோனா வைரஸால் நாடே விழி பிதுங்கி திக்கற்று நிற்கும் நிலையிலும் கூட களத்தில் நின்று, விளிம்பு நிலையில் உள்ள ஏழை, எளிய, மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் என அத்தியாவசிய பொருள்களை வழங்கி தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் தீவீரமாக செயலற்றி வருகிறார்கள் . ‘எங்கள் கட்சித் தலைவரே களத்தில் நேரடியாக இறங்கிச் செயல்படுகிறார். அவருடைய ஆணைப்படி, நாங்களும் எங்களது பகுதிகளில் பயனாளிகளுக்கு அத்தியாவசிய பொருள்களை நிவாரணமாக வழங்கி இருக்கிறோம்’ என தங்களது சொந்த பணத்தில் திமுகவினர் பலரும் பல மாவட்டங்களில் திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் ஆணையின்படி ஏழை, எளிய, மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை நிவாரணமாக வழங்கி வருகிறார்கள். அந்த அடிப்படையில் கொடைக்கானலில் உள்ள ஏழைய எளிய பொதுமக்களுக்கு திமுக முன்னாள் கவுன்சிலரும் சக்தி பில்டர்ஸ் உரிமையாளருமான சக்தி மோகன் 5 கட்டமாக சுமார் 5 லட்சம் மதிப்பில் நிவாரண உதவி வழங்கினார். 
இந்நிகழ்ச்சியில் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு சமூகஇடைவெளி விட்டு பொதுமக்கள் வரிசையாக நின்று நிவாரண பொருட்களை பெற்றுச் சென்றனர்.
கொடைக்கானல் முன்னாள் கவுன்சிலர் சக்தி மோகனின் ஏற்பாட்டில் நிவாரண உதவிகளை பெற்றுக் கொண்ட மக்கள் பலர் திமுக தலைவர் ஸ்டாலினையும், முன்னாள் கவுன்சிலர் சக்தி மோகனின் மனிதநேயமிக்க இப்பணியை மனதார பாராட்டினர்.
கொடைக்கானலில் சக்தி மோகன் சார்பில் கொரானா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் திமுக முன்னாள் நகர்மன்ற தலைவர் முகமது இப்ராஹிம், நகர செயலாளர் மாயக்கண்ணன், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செல்லதுரை உள்ளிட்ட திமுகவினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கொடைக்கானலில் சுற்றுலாத் துறையை நம்பியே வாழ்வாதாரம் நடத்தி வந்த பல ஏழை, எளிய மக்கள் 144 தடை உத்தரவு காரணமாக ஏப்ரல், மே ஆகிய சீசன் காலத்தில் முற்றிலும் சுற்றுலா பயணிகள்; வராத நிலை உருவானது. இதனை நம்பியே வாழ்வாதரம் நடத்தி வந்த வியாபாரிகள், ஏழை, எளியோர்கள், ஆகியோர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில் அரிசி, காய்கறி உள்ளிட்ட சமையல் பொருட்களை தொடர்ந்து சக்தி பில்டர்ஸ் உரிமையாளரும் முன்னாள் திமுக கவுன்சிலரும், நகர்மன்ற துணை தலைவரும் சக்தி மோகன் அவர்கள் தாய் உள்ளத்தோடு இதுவரை தனது சொந்த பணத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளார்.
இந்த இக்கட்டான பேரிடர் காலக்கட்டத்தில் ஏழை, எளிய பொதுமக்கள் திமுக சார்பில் இவர் வழங்கிய நிவாரண உதவியை அனைத்து தரப்பு மக்களும் நன்றியோடு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள், கழக மாவட்ட செயலாளர்கள், என திமுக கட்சியினர் போட்டிப் போட்டுக் கொண்டு நிவாரண பொருட்கள் வழங்கி வரும் நிலையில், கொடைக்கானலில் திமுக நிர்வாகி சக்தி மோகன் செய்து வரும் இந்த சிறப்பான நிவாரண பணியை திமுக தலைமை வட்டாரத்தில் பாராட்டு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி தொகுப்பு: கொடைக்கானல் வி.ஆனந்த்

