கொடைக்கானல் சமூக நீதி போராளியும், சமூக ஆர்வலருமான கீஸ் ராஜ்மோகன் மலைவாழ் மக்கள் மற்றும் ஏழை எளியோர்களுக்கு 4 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் வழங்கினார்.
கொடைக்கானல், மே.12
கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக 144 தடை உத்தரவால் பொதுமக்கள் வீட்டிற்குள்ளே முடங்கி போய் உள்ளனர். இதனால் அன்றாடம் பிழைப்பு நடத்தி வரும் பொதுமக்கள் பலர் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு உதவும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்கள் சார்பில் நிவாராண பொருட்களை நாள் தோறும் வழங்கி வருகின்றனர்.
அந்த அடிப்படையில் கொடைக்கானல் பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள், ஏழை எளியோர்கள், கூலி தொழிலாளர்கள், தீயனைப்புத் துறை பணியாளர்கள் ஆகியோருக்கு கீஸ் ராஜ்மோகன் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து அரிசி, காய்கனி, பிஸ்கட், மளிகை சாமான்கள் மற்றும் முககவசம் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாராண பொருட்களை வழங்கினார். 
கீஸ் ராஜ்மோகன் கொடைக்கானல் பகுதி மக்களுக்கு கஜா புயல் போன்ற பேரிடர் காலங்களிலும் இதுபோன்ற உதவிகள் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெருங்காடு பகுதியில் உள்ள பழங்குடியினருக்கு தன் சொந்த செலவில் வீடுகளுக்கு வயரிங் செய்து மின் இணைப்பு வாங்கிக் கொடுத்து பல குடும்பங்களுக்கு ஒளிவிளக்கு ஏற்றியவர். பாறைப்பட்டியில் சாலை அமைக்க கேட்டு பொதுமக்கள் கோரிக்கை வைத்தபோது அடுத்த நாளே தனது சொந்தசெலவில் ஜேசிபி இயந்திரம் மூலம் சாலை அமைத்து கொடுத்தார் கீஸ் ராஜ்மோகன்.
அதுபோல் கொடைக்கானல் பகுதியில் உள்ள எழை எளிய மற்றும் மலைவாழ் மக்களின் குழந்தைகள் கல்வியினை தொடர முடியாத நிலையை கண்டு மிகவும் வருந்தினார். உடனே அவர்களுக்கு உதவி புரியும் வகையில் கல்வி உதவி தொகை வழங்கி பல ஏழை மாணவர்கள் கல்வி தொடர அப்பகுதி கல்வி தந்தையாக போற்றப்படுகிறார்.
காமராஜர்புரம் ஆரம்பப் பள்ளி உருவாக இவர் எடுத்த பெருமுயற்சியே காரணம். கொடைக்கானல் பகுதி மக்களின் வாழ்வாதார பிரச்சனை பலவற்றிற்கு நீதிமன்றம் மூலம் சட்ட போராட்டங்களை நடத்தி பாமர மக்களுக்கு உதவி புரிந்துள்ளார்.

கொடைக்கானல் சுற்றுசூழல் பாதுகாப்பு இளைஞர் நற்பணி இயக்கத்தின் தலைவராக இருக்கும் கீஸ் ராஜ்மோகன் கொரானா வைரஸ் தாக்கத்தினால் போடப்பட்ட 144 தடை உத்திரவால் முடங்கி கிடந்த ஏழை எளிய மற்றும் மலைவாழ் மக்களுக்கு தாமாக முன்வந்து உதவி செய்ய முடிவுசெய்தார். அதன்படி வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கனி மற்றும் பலசரக்கு சாமான்கள் உள்ளிட்ட தொகுப்புகள் சுமார் 4 லட்சம் மதிப்பீட்டில் 400 குடும்பத்தினருக்கு வழங்கினார். அரசின் சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்கள் வரிசையாக நின்று நிவாரண பொருட்களை பெற்றுக்கொண்டனர்.
கீஸ் ராஜ்மோகன் வழங்கிய கொரானா நிவாராண உதவிகளை பெற்றுக் கொண்ட.
செய்தி தொகுப்பு:
கொடைக்கானல் வி.ஆனந்த்
