கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கிசிச்சை பெற்று வந்த நெல்லை மாவட்ட நீதிபதி உயிரிழந்தார்.
நெல்லை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி நீஷ். இவருக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கரோனா தொற்றால் உயிரிழந்த நீதிபதி நீஷ், ஏற்கனவே வள்ளியூர், நாகர்கோவிலில் சிவில் நீதிபதியாக இருந்தவர், கடந்த 10 நாள்களுக்கு முன்புதான் நெல்லை தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதியாக பதவியேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

