தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாத்தான்குளம் அருகிலுள்ள முதலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆய்வு செய்தார்.
கொரனோ தடுப்பு
பணிகள் முழுவீச்சில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நடைபெற சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் இந்த தடுப்பு நடவடிக்கையின் முன்னுதாரணமாக சட்டமன்ற உறுப்பினர் கொரனோ தடுப்பூசி நேற்றுமுன்தினம் போட்டுக்கொண்டார். இந்நிலையில் நேற்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து அங்கு உள்ள மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு தெரிவித்ததுடன் பொதுமக்கள் அரசு அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் காங்கிரஸ் எடிசன் உட்பட முதலூர் பகுதி மக்கள் பலரும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் சுமதி சட்டப்பேரவை உறுப்பினரிடம் கோரிக்கை மனு வழங்கினார் மருத்துவமனையில் உள்ள ரோடுகள் பழுதடைந்துள்ளன ஆபரேஷன் தியேட்டர் மிகவும் பழுதாகி உள்ளன சுற்றுப்புற காம்பௌண்ட் சுவர் கட்டி தர வேண்டும் என்ற கோரிக்கையை கூறினார். சட்டப்பேரவை உறுப்பினர் உடனடியாக செய்து கொடுப்பதாகவும் தொகுதி உள்ள மக்கள் அனைவரும் கொரனா தொற்று நோயை தடுப்பதற்காக தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து தமிழக அரசு அறிவித்துள்ள ஊசியை போட்டுக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும் இந்த மருத்துவமனையை தரம் உயர்த்த வதற்காக இந்த மருத்துவமனை உள்ள குறைபாடுகளை மாவட்ட ஆட்சியருடன் பேசி விரைவில் செய்து கொடுக்கப்படும் என்று கூறினார் முதலூர் மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவ கட்டிடத்தின் படுக்கைகள்
தயார் நிலையில் இருப்பதாகவும் ஆனால் அதை பயன்படுத்த முடியாமல் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். கொரனாவை தடுப்பதற்காக படுக்கையில் உள்ளது .அதிலே ஆக்சிசன் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியாமல் உள்ளது உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து இதனை செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவை உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் முன்னதாக முதல்வர் ஊராட்சி தலைவர் பொன் முருகேசன் சட்டப்பேரவை உறுப்பினரை வரவேற்றார் தெரிவித்தார் இவருடன் மாவட்ட துணைத்தலைவர் சங்கர் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் பார்த்தசாரதி சக்திவேல் முருகன் ஒன்றிய கவுன்சிலர் குருசாமி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் வேணுகோபால் துணை தலைவர் ஞானபிரகாசம் நகர வர்த்தக அணி தலைவர் கதிர்வேல் நகர மகிளா காங்கிரஸ் தலைவர் ராணி ஜோசப் நகர தொண்டரணி தலைவர் பாஸ்கர் வட்டார இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் பட்டு முன்னாள் வட்டாரத் தலைவர் யோக பாண்டி மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் காங்கிரஸ் எடிசன் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர்ஜெய சீலன் துரை மாவட்ட பட்டதாரி பிரிவு தலைவர் ஜெபஸ் பிளஸ்வின் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் முத்து மணி பெருங்குளம் நகரத் தலைவர் மூக்காண்டி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் இசை சங்கர் பண்டாரபுரம் ஊராட்சி தலைவர் பால சிங்முதலூர் பஞ்சாயத் தலைவர் முருகேசன் சட்டமன்ற உறுப்பினர் உதவியாளர் சந்திரபோஸ் முதலூர் திமுக கிளைச் செயலாளர் ஒன்றிய திமுக சிறுபான்மை பிரிவு தலைவர் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் ஸ்ரீவைகுண்டம்சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார் மருத்துவர்கள் ஆட்சயா மேரி சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர்மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்பின்னர் மருத்துவமனையைச் சுற்றி ஆய்வு செய்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்

