அனைவரும் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். ஏரலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த கனிமொழி எம்பி பேட்டி.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகள் மற்றும் சிகிச்சை தொடர்பாக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அவர்கள் ஏரல் பகுதியில் நோய் தொற்று குறித்தும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் முன்னேற்பாடு நடவடிக்கைகளை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
அதன்பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்றைய தினம் ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோய் தடுப்பு திட்டம் குறித்து ஆய்வு செய்தோம், பொதுமக்களாகிய நீங்கள் அனைவரும் நோய் தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள வேண்டும், நமது முதல்வர் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டுள்ளார். அதேபோல் நான் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளோம். இந்த தடுப்பூசியால் எந்தவித பின் விளைவும் கிடையாது. எனவே பொதுமக்களாகிய நீங்கள் அனைவரும் நோய் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றார் மேலும் முழு ஊரடங்கு வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பொது மக்கள் ஆகிய அனைவரும் முறையாக இந்த ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும் அப்படி கடைபிடித்தால் முழு ஊர் அடங்கிற்க்கு தேவை இருக்காது என்று அவர் பேசினார்.

