அன்னையர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியிலுள்ள முதியோர் இல்லத்திற்க்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்கினார்.
தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி கலை கதிரவன்
அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னா ஜார்விஸ் அவர்களால் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் அன்னையர் நாள் (Mother’s day) ,உருவாக்கப்பட்டது; இது குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குடும்பங்களின் உறவுச் சூழல்களை மையமாகக் கொண்டது, இது, இப்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது.
அலெக்ஸ் கைலாசம் அறக்கட்டளை நடத்தும் முதியோர் இல்லத்தில் இன்று அன்னையர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் அங்குள்ள பெரியவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்களை தூத்துக்குடி ஊரக துணை காவல் கண்காணிப்பாளர் கலை கதிரவன் வழங்கினார்.
இதில் வக்கீல் சின்னத்தம்பி ,அலெக்ஸ் கைலாசம் அறக்கட்டளை நிறுவனர் வின்சென்ட் உட்பட பலர் பங்கேற்றார்கள்.

