பிரஸ் & மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் சார்பில் 2 வது நாளாக தொடர்ந்து பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

வத்தலகுண்டு, மே,9
கொரோனா வைரஸ் உலகத்தையை புரட்டி போட்டுள்ள நிலையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமுலில் இருந்து வருகிறது இதனால் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கபட்டு உள்ளது. அன்றாடம் வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வரும் பல ஏழை, எளிய மக்கள் மிகவும் வறுமையில் இருந்து வருகின்றனர்.
இதனை போக்கும் வகையில் நாடு முழுவதும் தொண்டு நிறுவனம், அறக்கட்டளை, சமூக அமைப்புகள் பல்வேறு அரசியல் கட்சியினர், தொழில் அதிபர்கள், மனித நேயமிக்க நல்ல உள்ளங்கள் ஆகியோர் நாட்டில் அணைத்து பகுதிகளிலும் உணவு பொருள்கள், காய்கறி, அரிசி, ஆகியவை வழங்கி வருகின்றனர். கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்த்துறையினர் தூய்மை பணியாளரக்ள் பத்திரிகையாளர்கள் ஆகியோர் இரவு பகல் பாராமல் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பத்திரிகைதுறையை சார்ந்தவர்கள் பொது மக்களுக்கு பல்வேறு விழ்ப்புணர்வு பணிகளில் ஈடு பட்டு வரும் நிலையில் பொதுமக்களுக்கு உதவி செய்யும் நோக்கில் அவர்கள் தங்களது சார்பில் பல்வேறு நிவாரண பணிகளும் செய்து வருவது சிறப்பு
அந்த அடிப்படையில் இந்த பேரிடர் காலகட்ட த்திலும் நேற்று பிரஸ் & மீடியா பிப்பிள் சார்பில் மதுரை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட அய்யர் பங்ளாவில்
பொதுமக்கள், காவல்துறை நண்பர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவருக்கும் ” கரோனா வைரஸ்” லிருந்து தற்காத்துக்கொள்ள ‘மாஸ்க்’ மற்றும் ‘கப சூர’ குடிநீர் இலவசமாக அளிக்கப்பட்டது
இந்த நிகழ்வில் ஏராளமானோர் பங்குபெற்றனர் . சிறப்பு விருந்தினராக பிரஸ் & மீடியா பிப்பிள் அசோசிசன் பொதுச்செயலாளர் திரு.K.ரபிக்அகமது அவர்கள் பங்கேற்றார், பிரஸ் & மீடியா பிப்பிள் அசோசியேசன் மாநில அமைப்பு செயலாளர் Er.R.பாலசுப்பிரமணி. பிரஸ் & மீடியா பிப்பிள் அசோசியேசன் மாநில PRO Dr.K.சின்னராஜா அவர்களது தலைமையில், மதுரை மாவட்ட தலைவர் திரு.V.பழனியப்பன்,மதுரை மாவட்ட செயலாளர் திரு.R.ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, மேலும் பிரஸ் & மீடியா பிப்பிள் அசோசியேசன் மாநில,மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை செய்தனர். அதனை தொடர்ந்து நேற்று 2 வது கட்டமாக வத்தலகுண்டு பகுதியில் பிரஸ் & மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் மற்றும் லட்சுமி சிகிச்சாலயா இணைந்து அப்பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய சமையல் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது.
பிரஸ் & மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் மாநில ஆலோசகர் பாலமுருகன். பிரஸ் & மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் நிறுவனர் & பொதுசெயலாளர் K.ரபிக்அகமது அவர்கள் தலைமையில் சுமார் 100 குடும்பங்களுக்கு தேவையான அரிசி காய்கறி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது ..
இது போன்ற பேரிடர் காலகட்டத்தில் பிரஸ் & மீடியா பிப்பிள் அசோசியேசன் சார்பில் இந்த அமைப்பின் பொது செயலாளர் ரபீக் அகமது ஏற்பாட்டில் நேற்று பல்வேறு தரப்பினருக்கும் 2 வது கட்டமாக மனித நேயத்தோடு ஏழை எளிய மக்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருள் வழங்கியது அணைத்து தரப்பினராலும் பாராட்ட படுகிறது. பத்திரிகையாளர்கள் நலனுக்காக இயங்கி வரும் பிரஸ் & மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் மனித நேயத்தோடு பொதுமக்களுக்கு செய்து வரும் இந்த பணியினை காவல்துறையினர், அரசு அதிகாரிகள், மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்களும் மனதார பாராட்டி வருகிறார்கள்.
பிரஸ் & மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் நிர்வாகிகளின் பணி மென்மேலும் சிறக்க போலீஸ் செய்தி டிவி குழுமம் சார்பில் மனதார வாழ்த்துகிறோம்
செய்தி தொகுப்பு
போலீஸ் செய்தி டிவிக்காக
வி. ஆனந்த

