தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான தலைமை காவலரை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மீளவிட்டான் சுடுகாட்டுப் பகுதியில் பாத்திமா நகரைச் சேர்ந்த பேனட் மச்சாது மகன் லூர்து ஜெயசீலன் (41) என்பவர் கடந்த 09.05.2021 அன்று இரவு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தனது தாய் மாமாவை கொன்றதற்காக பழிவாங்கும் நோக்கத்துடன் கொலை செய்ததாக மத்தியபாகம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமைக் காவலர் பொன் மாரியப்பன் என்பவர் உட்பட 2பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், கைதான தலைமை காவலர் பொன் மாரியப்பனை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவிட்டார். கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரி காவல்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தபோதிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நேர்மையான முறையில் தலைமைக் காவலரை கைது செய்து, தற்காலிக பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது .

