
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு தலைமைச் செயலக பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர்
சி பி கிருஷ்ணன் சார்பில் கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அந்த கோரிக்கை மனுவில் அவர்கள் தெரிவித்ததாவது

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் பணியாற்றும் ஊடகத் துறையை சார்ந்த அனைத்து செய்தியாளர்களுக்கும் கொரனோ தொற்று காலகட்டத்தில் நிவாரண தொகை வழங்கப்பட்டது தற்போது தமிழகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்கள பணியாளர்களாக தங்களால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பத்திரிக்கையாளர்களுக்கு நிவாரண உதவி வழங்குமாறு பத்திரிக்கையாளர்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விழிப்புணர்வு செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு இரவு பகல் என்று பணியாற்றிய ஊடகம் மற்றும் செய்தித் துறையில் பணியாற்றியவர்களுக்கு நிவாரணத் தொகையாக கடந்த ஆண்டு தலா 3,000 வீதம் ஒவ்வொரு பத்திரிகையாளர்களுக்கும் வழங்கப்பட்டது
தொற்றுநோயை கண்டு அஞ்சாமல் கடைகோடி மக்களுக்கு விழிப்புணர்வு செய்திகளை கொடுக்க வேண்டுமென சேகரித்த பல செய்தியாளர்கள் கொரனோ தொற்று க்கு பலியான நிகழ்வுகளும் உண்டு
கொரனோ தொற்று இரண்டாம் அலை உச்சகட்டத்தில் இருக்கும் இந்த சூழ்நிலையில் முன்கள பணியாளராக ஊடகத் துறையினரை அறிவித்த தமிழக முதல்வருமான தங்களுக்கும் தமிழக அரசுக்கும் செய்தியாளர்கள் என்ற முறையில் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
எளிமையான பத்திரிக்கையாளர்களின் நலன் கருதி இந்த தருணத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாது செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வரும் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பத்திரிகையாளர்களுக்கும் நிவாரணத் தொகை அல்லது ஊக்கத்தொகை வழங்கி பத்திரிகையாளர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்

