
பிரஸ் & மீடியா பிப்பிள் அசோசிசன் சார்பில் பொதுமக்கள், காவல்துறை, தூய்மை பணியாளர்கள் என அனைவருக்கும் ” நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கப சுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் நாளுக்குநாள் உயிரழப்பு அதிகரித்து வருகிறது.
தடுப்பு மருந்து இல்லாததால் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில் கபசுர குடிநீர் அருந்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என சித்தா மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் கபசுரக் குடிநீரை அருந்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக அவர்கள் நாட்டு மருந்து கடைகளுக்கு அலைந்து வருகின்றனர்.
இதையடுத்து பிரஸ் & மீடியா பிப்பிள் அசோசிசன் சார்பில் மதுரை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட அய்யர் பங்ளாவில்
பொதுமக்கள், காவல்துறை நண்பர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவருக்கும் ” கரோனா வைரஸ்” லிருந்து தற்காத்துக்கொள்ள ‘மாஸ்க்’ மற்றும் ‘கப சூர’ குடிநீர் இலவசமாக அளிக்கப்பட்டது இந்த நிகழ்வில் ஏராளமானோர் பங்குபெற்றனர் சிறப்பு விருந்தினராக பிரஸ் & மீடியா பிப்பிள் அசோசிசன் பொதுச்செயலாளர் திரு.K.ரபிக்அகமது அவர்கள் பங்கேற்றார், பிரஸ் & மீடியா பிப்பிள் அசோசிசன் மாநில அமைப்பு செயலாளர் Er.R.பாலசுப்பிரமணி. பிரஸ் & மீடியா பிப்பிள் அசோசிசன் மாநில PRO Dr.K.சின்னராஜா அவர்களது தலைமையில், மதுரை மாவட்ட தலைவர் திரு.V.பழனியப்பன்,மதுரை மாவட்ட செயலாளர் திரு.R.ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, மேலும் பிரஸ் & மீடியா பிப்பிள் அசோசிசன் மாநில,மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை செய்தனர்…. இது போன்ற பேரிடர் காலகட்டத்தில் பிரஸ் & மீடியா பிப்பிள் அசோசிஸன் சார்பில் உதவிகள் செய்வது வழக்கம் அந்த அடிப்படையில் இந்த அமைப்பின் பொது செயலாளர் ரபீக் அகமது ஏற்பாட்டில் நேற்று பல்வேறு தரப்பினருக்கும் கப சுர குடிநீர் வழங்கியது அனைவராலும் பாராட்டபட்டது. பத்திரிகையாளர்கள் இந்த கொரோனா வைரஸ் தொற்று காலகட்டத்தில் தங்களது உயிரை பொருட்படுத்தாமல் பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்திகளை கொண்டு வரும் நிலையில் அதற்கு மேலாக அனைவரும் பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் செய்து வரும் பணி அணைத்து தரப்பினராலும் பாராட்டபடுகிறது
செய்தி தொகுப்பு
திண்டுக்கல் மாவட்ட நிருபர்
வி. ஆனந்த

