திருச்செந்தூர் அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகரைச் சேர்ந்தவர் தஸ்நேவிஸ் மகன் அந்தோணிராஜ் (29). கூலித் தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக சரியான வேலை இன்றி தவித்து வந்துள்ளார். இதனால் அவரது மனைவியுடன் குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மன வேதனை அடைந்த அவர் நேற்று தனது வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

