தூத்துக்குடியில் தமிழன்டா கலைகூடம் மற்றும் தமிழ் மேம்பாட்டு மையம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றி கபசுரகுடிநீர் மற்றும் இலவச முககவசங்கள் வழங்கினார்
*♻️இன்று (09.05.2021) தமிழன்டா கலைகூடம் மற்றும் தமிழ் மேம்பாட்டு மையம் சார்பாக கொரோனா விழிப்புணர்வு முகாம் மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.*
*♻️இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் கொரோனா வைரஸ் 2ம் அலை தீவிரமாக பரவி வருவதால் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைபிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், முகக்கவசத்தை உரிய முறையில் மூக்கு, வாய் ஆகியவற்றை முற்றிலுமாக மறைத்து முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரகுடிநீர் எடுத்துகொள்ள வேண்டும், மேலும் கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டு கொள்வதன் மூலம் நம் உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்புரைறயாற்றினார். பின் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு கபசுரகுடிநீர், நிலவேம்பு கசாயம் மற்றும் இலவச முககவசங்களை வழங்கினார்.*
*♻️இந்த விழிப்புணர்வு முகாமிற்கான ஏற்பாடுகளை தமிழன்டா கலைகூடம் தலைவர் திரு. ஜெகஜீவன், திரு. சீலன் ஸ்ருதி மற்றும் வடக்கு சோட்டையன் தோப்பை சேர்ந்த திருமதி. வசந்தா ஆகியோர் செய்திருந்தனர். மேலும் இக்கூடத்தின் உறுப்பினர்கள் வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியில் வீடாக வீடாக சென்று கபசுரகுடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள்.*
*♻️இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஜெயந்தி, உதவி ஆய்வாளர் திரு. மகாராஜா மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.*

