கொடைக்கானலில் அதிமுக பிரமுகர்
ஆசாத் மற்றும் அவருடைய மகன் ரியாஜ் ஆகியோர் தலைமையில் சுமார் 300 க்கு மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் தொகுப்பு வழங்கப்பட்டது
——————————-
கொடைக்கானலில் அதிமுக பிரமுகர்
ஆசாத் மற்றும் அவருடைய மகன் ரியாஜ் ஆகியோர் தலைமையில் சுமார் 300 க்கு மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் தொகுப்பு
வழங்கப்பட்டது.
கொரோனா வைரஸ் உலகத்தையை புரட்டி போட்டுள்ள நிலையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமுலில் இருந்து வருவதால் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கபட்டு உள்ளது.இதனால் அன்றாடம் வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வரும் பல ஏழை, எளிய மக்கள் மிகவும் வறுமையில் இருந்து வருகின்றனர். இதனை போக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர்கள் அரசியல் கட்சியினர், தொழில் அதிபர்கள், மனித நேயமிக்க நல்ல உள்ளங்கள் ஆகியோர் நாட்டில் அணைத்து பகுதிகளிலும் தொடர்ந்து உணவு பொருள்கள், காய்கறி அரிசி ஆகியவை வழங்கி வருகின்றனர்.
அந்த அடிப்படையில் இந்த பேரிடர் காலங்களில் மிகவும் கஷ்ட சூழ்நிலையில் உள்ள
கொடைக்கானல் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் மற்றும் தொழிலார்கள் உட்பட சுமார் 300 க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு தனது சொந்த செலவில்
அரிசி, காய்கறி, உள்ளிட்ட
நிவாரண பொருள்களை கொடைக்கானல் அதிமுக பிரமுகர்
ஆசாத், மற்றும் அவரது மகன் ரியாஜ் ஆகியோர் இணைத்து சுமார் 300 க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார். இவர்கள் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வருமான சான்று, திருமண உதவி தொகை உட்பட அரசு சார்ந்த சான்றுகள் பெறுவதற்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்கள் பாமர மக்களுக்கும் ஏழை, எளிய மக்களுக்கும் இவர் பல்வேறு உதவிகள் செய்து வரும் நிலையில் இந்த இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு மனித நேய தோடு குறிப்பாக
கொடைக்கானல் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மனித நேயர்களான இவர்கள் பல்வேறு கால கட்டத்தில் உதவி செய்து வருவது போல் அதே அடிப்படையில் இந்த பேரிடர் கால கட்டத்திலும் இவர்கள் கொடைக்கானல் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு செய்து வரும் பெரும் உதவிகளை
அப்பகுதி மக்கள் மனித நேயமிக்க இவர்களை மனதார வாழ்த்துகிறார்கள்
அதிமுக பிரமுகர் ஆசாத் அவருடைய மகன் ரியாஜ் தலைமையில் சுமார் 300 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு ஆனா அரிசி மற்றும் ஏழு வகை காய்கறிகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிட தக்கது இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக நகரமன்ற தலைவர் ஸ்ரீதர், அதிமுக அவைத்தலைவர் ஜான் தாமஸ, உட்பட அதிமுக முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்தி தொகுப்பு கொடைக்கானல்
வி. ஆனந்த

