
தூத்துக்குடியில் மாஸ்க் அணியாமல் வந்த வாகனஓட்டிகளுக்கு மாஸ்க் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் மற்றும் தளிர் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.
கொரோனா வைரசால் சிவப்பு மண்டலமாக இருந்த தூத்துக்குடி மாவட்டம் தற்போது ஆரஞ்சு மண்டலமாக மாறியுள்ள நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே வரும் போது வாகனஓட்டிகள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே மாஸ்க் அணியாமல் வந்த வாகனஓட்டிகளுக்கு மாஸ்க் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் மற்றும் தளிர் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (டியூஜே) மாநகர் மாவட்ட தலைவர் சக்தி முருகன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். துணை தலைவர் சண்முக ஆனந்தன், செயலாளர் சங்கர், பொருளாளர் ஞானதுரை, மூத்த பத்திரிகையாளர் குமாரவேல், தீக்கதிர் விக்னேஷ், மாருதி போட்டோ ஸ்டூடியோ லட்சுமணன், தளிர் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் டவுன் டிஎஸ்பி பிரகாஷ், வாகனஓட்டிகளுக்கு மாஸ்க் வழங்கினார்.
அது போல் பத்திரிகையாளர்களுக்கும், காவலர்களுக்கும் கைகளை சுத்தப்படுத்தும் வகையில் கிருமிநாசினி பாட்டில்களையும் டிஎஸ்பி பிரகாஷ் வழங்கினார். நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆய்வாளர் செல்வி, போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் வெங்கடேஷ், சிவகுமார் மற்றும் போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர்.

