தூத்துக்குடியில் தனியார் லாட்ஜில் தங்கியிருந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திடீரென உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் மூர்த்தி மந்திரம் (53), தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ரோகினி என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் கிருஷ்ணாபுரத்தில் வசித்து வருகின்றனர். மூர்த்தி மந்திரம் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ விடுப்பில் இருந்து வந்தார்.
இந்நிலையில், தூத்துக்குடியில் வீட்டு லோன் மற்றும் சிலிண்டர் பெயர் திருத்தம் செய்வதாக கூறி, தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருக்கிறார். நேற்று இரவு சுமார் 10 மணி உறங்க சென்றுள்ளார். இன்று காலை ரூம் பாய் சென்று பார்த்தபோது அவர் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கபட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

