தூத்துக்குடியில் முன்விரோதத்தில் வாலிபரை கத்தியால் தாக்கி கொல்ல முயன்றதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி அண்ணா நகர் 7வது தெருவைச் சேர்ந்தவர் சுதாகர் மகன் இம்மானுவேல் (19). இவருக்கும் அண்ணாநகர் 9-வது தெருவைச் சேர்ந்த முருகன் மகன் வெங்கடேஷ் (19) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இம்மானுவேலை அவரது வீட்டு அருகில் வைத்து வெங்கடேஷ் மற்றும் அண்ணா நகர் 8-வது தெருவைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்ற ரமேஷ்குமார், அண்ணாநகர் 1-வது தெருவைச் சேர்ந்த சுயம்புலிங்கம் மகன் பொன்ராஜ், அண்ணாநகர் 7-வது தெருவை சேர்ந்த பால்ராஜ் மகன் பரமசிவம் ஆகியோர் அவதூறாக பேசி கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து இமானுவேல் அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷ், ரஞ்சித்குமார், பொன்ராஜ் மற்றும் பரமசிவம் ஆகியோரை கைது செய்தார்.

