ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜான் நிக்கல்சன் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொரோனா அறிகுறிகளுடன் சென்னை அரசு மருத்துவமனையில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜான் நிக்கல்சன் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிக்சை பலனின்றி இன்று ஜான் நிக்கல்சன் உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜான் நிக்கல்சன் 2013-இல் டிஐஜியாக இருந்து பணி ஓய்வு பெற்றவர். தமிழ்நாடு வால்சண்டை சங்க தலைவராக (2019 முதல் 2023-ம் ஆண்டு வரை) ஜான் நிக்கல்சன் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2008ம் ஆண்டு எஸ்.பி.யாக பணியாற்றியவர். அதன் பிறகு திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி ஆகவும், போதை பொருள் தடுப்பு பிரிவு, திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
பல்வேறு காவல்துறை பொறுப்புகளில் இருந்து ஓய்வு பெற்றவர். கன்னியாகுமரிக்கு வருகை தந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த அவர் அவரது முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இவர் பணியாற்றிய மாவட்டங்கள் அனைத்திலும் பொதுமக்களின் பாராட்டுதலையும் அன்பையும் பெற்றவர். குறிப்பாக ஊடக துறையினர் மற்றும் பத்திரிகையாளர்களிடம் நட்புணர்வுடன் செயல்பட்டவர்.
காவல் துறையில் கம்பீரமாக சிங்கம் போல் வலம் வந்த ஜான் நிக்கல்சன் ஐ.ஜி அவர்களின் மறைவு தமிழக மக்கள் மற்றும் பத்திகையாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்களுக்கு இவரது மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
காவல்துறையில் சிங்கம் போல் கம்பீரமாக வலம் வந்தவர் ஜான் நிக்கல்சன். அவரது மறைவிற்கு காலைதீபம் நாளிதழ், போலீஸ் செய்தி நியூஸ் சேனல் சார்பில் இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

