சென்னை ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் , பெருநகர மாநகராட்சி ஆணையாளருடன் நேரில் சென்று பாதுகாப்பு பணிகளையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கட்டமைப்புகளை நேற்று ஆய்வு செய்தார்
02.05.2021 அன்று, நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற உள்ளதால், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷ்னர் பிரகாஷ், இ.ஆ.ப., மற்றும் சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப ஆகியோர் நேற்று 30.04.2021 ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு நேரில் சென்று பாதுகாப்பு பணிகள் மற்றும் அங்கு மேற்கொண்டுள்ள கட்டமைப்புகளை ஆய்வு செய்து கலந்தாய்வு மேற்கொண்டனர்.



