• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வெற்றி கொண்டாட்டங்கள் ஊர்வலங்கள், வெடி வெடிக்கவும் அனுமதியில்லை – மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்

policeseithitv by policeseithitv
May 1, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சியர் செந்தில்ராஜ் வாக்குறுதியை ஏற்று இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி  வைத்த தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
வெற்றி கொண்டாட்டங்கள் ஊர்வலங்கள், வெடி வெடிக்கவும் அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ்,  தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல்கள், 2021 வாக்கு எண்ணிக்கையானது 02.05.2021 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்கும் காலை 08.00 மணியளவில் தூத்துக்குடியில் உள்ள பல்கலைக்கழக வ.உ.சி பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கையில் அரசு அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்கள்/முகவர்கள் ஆகியோர்கள் கீழ்க்கண்ட விவரப்படி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
பிரையண்ட் நகர் 7வது தெரு பொறியியல் கல்லூரியின் மெயின் நுழைவு வாயில் வழியாக அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினரும், பிரையண்ட் நகர் 8வது தெரு தடுப்புகள் வழியாக அமைக்கப்பட்டுள்ள நுழைவு வாயில் வழியாக ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குரிய வேட்பாளர்கள்/முகவர்களும், பிரையண்ட் நகர் 9வது தெரு தடுப்புகள் வழியாக அமைக்கப்பட்டுள்ள நுழைவு வாயில் வழியாக ஓட்டப்பிடாரம் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குரிய வேட்பாளர்கள்/முகவர்களும்,
கணேஷ்நகர் ஆரம்ப நுழைவு வாயில் (தீயணைப்பு நிலையம் அமைந்துள்ள பாதை) தடுப்புகள் வழியாக அமைக்கப்பட்டுள்ள நுழைவு வாயில் வழியாக கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குரிய வேட்பாளர்கள்/முகவர்களும், கணேஷ்நகர் இறுதியில் உள்ள நுழைவு வாயில் தடுப்புகள் வழியாக அமைக்கப்பட்டுள்ள நுழைவு வாயில் வழியாக தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குரிய வேட்பாளர்கள்/முகவர்களும், கணேஷ்நகர் வழியாக(தீயணைப்பு நிலையம் அமைந்துள்ள பாதை) வழியாக தங்களது சொந்த இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வரும் அரசு அலுவலர்கள்/வாக்கு எண்ணும் அலுவலர்கள்; கணேஷ்நகர் (தீயணைப்பு நிலையம் அமைந்துள்ள பாதை) வழியாக உள்ளே வந்து மைதானத்தில் வாகனங்களை நிறுத்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அந்தந்த நுழைவு வாயிலில் மட்டுமே சம்மந்தப்பட்ட நபர்கள் உள்ளே செல்ல முடியும். மேலும் வாகனங்களில் சென்றால் அந்தந்த நுழைவு வாயில் அருகே காவல்துறையினரால் வாகனங்கள் நிறுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பால் பாயிண்ட் பேனா A4 Paper, மற்றும் படிவம் 17c -யின் நகல் ஆகியவைகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. முகவர்கள் அனைவரும் முகவர்களாக நியமிக்கப்பட்டுள்ள படிவம் 18 மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றினை கொண்டு செல்ல வேண்டும்.
மேலும் கரோனா பெருந்தொற்று இல்லை என்பதற்கான RTPCR /RAT பரிசோதனை விவரம் அல்லது கரோனா தடுப்பூசியின் இருமுறை போட்டதற்கான சான்று ஆகியவற்றினை ஆஜர்படுத்தினால் மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவர். அனைவரும் முககவசம் அணிந்து உள்ளே வர வேண்டும். செல்போனை உள்ளே கொண்டு செல்ல அனுமதியில்லை. அரசு அலுவலர்களும் தங்களது அரசு அலுவலர்களான அடையாள அட்டை மற்றும் தேர்தல் பணிக்காக மாவட்ட தேர்தல் அலுவலர்/தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையினை அணிந்து முககவசம் அணிந்தும் வர வேண்டும். மேலும் தீப்பற்றும் பொருட்களான தீப்பெட்டி மற்றும் ஆயுதங்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியே தேவையற்ற பொதுமக்கள் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் முடிவுக்கு பின் வெற்றி கொண்டாட்டங்கள் ஊர்வலங்கள் எவற்றையும் நடத்தக்கூடாது. வெடிவெடிக்கவும் அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ்,  தெரிவித்துள்ளார்
Previous Post

காவல்துறையின் கம்பீரம் ஜான் நிக்கல்சன் ஐஜி இன்று கரோனாவுக்கு பலி

Next Post

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 35 பேர் கைது – 467 மதுபாட்டில்கள் பறிமுதல்

Next Post
காவல் நிலையம் முன்பு வெடிகுண்டு வீசிய 6 பேர் மீது குண்டர் சட்டம்

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 35 பேர் கைது - 467 மதுபாட்டில்கள் பறிமுதல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In